நடிகை சரண்யாவும், நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணனும் கடந்த 1995-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து கூறிய சரண்யா, என்னை அவர், கருத்தம்மா படத்திதான் முதலில் சந்தித்தார். அதில் இருவரும் கணவன் மனைவியாக நடித்தோம்.
பொன்வண்ணன் ஒருநாள் என்க்கு பொன் செய்து உங்க கால்ஷீட் வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான் எத்தனை நாட்கள் வேண்டும் என்று கேட்டபோது அவர் 70 வருடங்கள் வேண்டும் என்று சொன்னார். உடனே எனக்கு ஷாக்காக இருந்தாலும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொண்டேன்.
ஆனால் நான் உங்களை காதலிக்கிறேன் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். உங்களுடன் வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்டேன் உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் இல்லை என்றால் எந்த பிரச்னையும் இல்லை என்று சொன்னார். நான் அவரிடம் யோசிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டேன். அதற்கு அவர் நன்றாக யோசித்து சொல்லுங்கள் என்று சொன்னார்.
அதன்பிறகு நான் எனது அப்பாவிடம் அவர் சும்மா விளையாடுகிறார். செட்டில் அவர் சிரித்தது கூட இல்லை. அவர் ஏன் இப்படி பேசினார் என்பது தெரியவில்லை. என்று சொன்னேன். அதன்பிறகு எங்களுக்கு திருமணம் நடந்தது” என்று சரண்யா பொன்வண்ணன் கூறியுள்ளார்.