Saturday, September 14, 2024

‘காந்தாரா’ படத்தின் 2-ம் பாகம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, பெரும் வெற்றி பெற்ற திரைப்படம், காந்தாரா. கன்னட படமான இதன் வசூல்,  திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்தது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டும்  வெற்றி அடைந்தது.

மொத்தத்தில் ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார்.

‘காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் வருமா?’ என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வந்தனர்.

தற்போது இதற்கு  பதில் அளித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர். இவர்,  “காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக உருவாகும். முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது முதல் பாகத்துக்கு முந்தைய காலத்து கதையாகவோ அது இருக்கும். ரிஷப் ஷெட்டியுடன் கதை குறித்து விவாதிக்க இருக்கிறோம்” என்றார்.
 

- Advertisement -

Read more

Local News