நடிகர் ரஜினிகாந்த் அவர் நேற்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடினார். ரசிகர்கள் அவருக்கு நேரிலும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் லைகா தயாரிப்பில், ஞானவேல் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். தலைவர் 170 என்ற பெயரில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில் படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு நடிகர் ரஜினியின் பிறந்தநாளன்று நேற்று வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
அதேபோன்று ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘வேட்டையன்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பெயர் குறித்த டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘குறி வச்சா இரை விழணும்’ என்ற வசனத்துடன் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
படத்தின் பெயர் குறித்த டீசர் வீடியோவை ரசிகர்கள் தங்களது சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.