நேற்று நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் புதிய தலைவராக ராமசாமி என்னும் முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபல இயக்குநரான டி.ராஜேந்தர் 169 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் :
மொத்தம் பதிவான வாக்குகள்-1050
ராமசாமி @முரளி-557
டி.ராஜேந்தர்-388
தேனப்பன்-88
செல்லாதவை-17
துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் கதிரேசன் 493 வாக்குகளும், ஆர்.கே.சுரேஷ் 419 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
வாக்குகள் விபரம் :
கதிரேசன் – 493
R.K.சுரேஷ் – 419
P.T.செல்வகுமார் – 305
பாண்டியன் – 277
சிங்காரவேலன் – 193
முருகன் – 110
மதியழகன் – 50
பொருளாளர் பதவிக்கான தேர்தலில் சந்திர பிரகாஷ் ஜெயின் வெற்றி பெற்றுள்ளார்.
வாக்குகள் விபரம் :
சந்திர பிரகாஷ் ஜெயின் – 407
K.ராஜன் — 382
J.S.K சதீஷ்குமார் – 233
கெளரவ செயலாளர் பதவிக்கான தேர்தலில் ராதாகிருஷ்ணனும், மன்னனும் வெற்றி பெற்றுள்ளனர்.
துணைத் தலைவர்களில் ஒருவராக வெற்றி பெற்ற கதிரேசன், சுயேட்சையாக போட்டியிட்டவர்.
கெளரவ செயலாளர்களில் ஒருவராக வெற்றி பெற்ற மன்னன், டி.ராஜேந்தர் அணியில் போட்டியிட்டவர்.
மற்றைய வெற்றியாளர்கள் அனைவரும் முரளி அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள்
1) ஆர்.வி.உதயகுமார் – 598
2) அழகன் தமிழ்மணி – 470
3) மனோபாலா – 431
4) கே.பி.பிலிம்ஸ் பாலு – 425
5) மனோஜ்குமார் – 420
6) ஷக்தி சிதம்பரம் – 419
7) செளந்தரபாண்டியன் – 414
8) ஆர்.மாதேஷ் – 397
9) விஜயமுரளி – 396
10) ஏ.எல்.உதயா – 394
11) பைஜா டோம் – 366
12) டேவிட் ராஜ் – 352
13) பாபு கணேஷ் – 343
14) ராஜேஸ்வரி வேந்தன் – 341
15) ஏ.எம்.ரத்னம் – 339
16) அன்பாலயா கே.பிரபாகரன் – 326
17) K.K.ராஜ்சிற்பி – 326
18) வி.பழனிவேல் – 310
19) எஸ்.ராமச்சந்திரன் – 308
20) பிரைமுஸ்தாஸ் – 297
21) வீ.சரவணன் – 283
இவர்களில்,
1. அழகன் தமிழ் மணி (EC-7)
2. K.பாலு (EC-11)
3. G.M.டேவிட் ராஜ் (EC-15)
4. R. மாதேஷ் (EC-32)
5. பழனிவேல் (EC-40)
6. ராஜேஸ்வரி வேந்தன் (EC-53)
7. K.K.ராஜ்சிற்பி (EC-55)
8. S.ராமசந்திரன் (EC-57)
9. S.சௌந்தரபாண்டியன் (EC-74)
10. N.விஜயமுரளி (EC-89)
11. A.L.உதயா (EC-92)
12. R.V.உதயகுமார் (EC-93) – ஆகிய 12 பேர் முரளியின் ‘தயாரிப்பாளரின் நலன் காக்கும் அணி’யைச் சேர்ந்தவர்கள்.
ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் முரளி அணியைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளனர்.