Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பாகுபலி’ படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படும் இடமும், தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாலிவுட்டில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஆதி புருஷ்’.

இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

‘ஆதி புருஷ்’ படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களிடத்தில் இப்படத்தை பற்றிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. படத்தைப் பற்றிய புதிய தகவலுக்காக காத்திருந்த அவர்களுக்கு, படக் குழு, இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியாகும் தேதியும், இடத்தையும் அறிவித்து உற்சாகமடைய செய்திருக்கிறது.

வரும் அக்டோபர் 2-ம் தேதின்று உத்தரப்பிரதேசத்தின் புனித பூமியான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படவிருக்கிறது.

மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார், பிரபாஸ் மற்றும் படத்தின் நாயகி கீர்த்தி சனோன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

தீமைக்கும், நன்மைக்கும் இடையேயான போட்டி குறித்து, ராமாயணத்தை மையப்படுத்தி தயாரான இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு, உத்திரப்பிரதேசத்தில் உள்ள இந்து மதம் சார்ந்த புனித நகரமாக கருதப்படும் ராமர் பிறந்த பூமியில் நடைபெறுவது பொருத்தமானதாக அமைந்திருக்கிறது.

டி சிரீஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில், அகில இந்திய அளவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த ‘ஆதி புருஷ்’ திரைப்படம், ஐ மேக்ஸ் மற்றும் 3-டி தொழில் நுட்பத்தில் அடுத்தாண்டு ஜனவரி 12-ம் தேதி அன்று வெளியாகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News