Friday, April 12, 2024

நாளை முதல் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்தலாம்-தமிழக அரசு அனுமதி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த 2 மாதங்களாக சென்னையில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

இருந்தாலும் சில தொலைக்காட்சிகள் மட்டும் தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடர்ந்து நடத்தி வந்தன. ஆனால் டப்பிங் ஸ்டூடியோக்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இந்த இரண்டாவது அலையினால் அறிவிக்கப்பட்டிருந்த லாக் டவுனில் மூன்றாவது முறையாக சில தளர்வுகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

இதன்படி,

“நாளை முதல் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்களுக்கு மேல் வைத்துக் கொள்ளாமல் நடத்தலாம்.

படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும், கலைஞர்கள், தொழிலாளர்கள் அனைவரும் முறையாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டுதான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும்.

பின் பணி வேலைகளைத் தொடரலாம்.

திரையரங்குகளில் அந்தந்த வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் தியேட்டர் பராமரிப்பு பணிகளைச் செய்யலாம்..” என்று தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News