“சாமானிய மக்களையும் அரசியலிலுக்கு வருவர்!”: தமன்னா கணிப்பு!

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் மகளிருக்கு 33 சதவிகித இடங்களை ஒதுக்கும் `மகளிர் இட ஒதுக்கீடு மசோதா’, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதை கங்கனா ரணாவத், ஈஷா குப்தா, அனுராக் தாகூர், திவ்யா தத்தா உள்ளிட்ட நடிகைகள் வரவேற்றனர். இந்த வரிசையில் தமன்னாவும் பாராட்டி உள்ளார்.

இவர்,  “இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். நாடாளுமன்ற நிகழ்வுகளைக் காண எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா, மிகவும் முக்கியமானது; இது, அரசியலில் ஈடுபட ஊக்குவிக்கும்.   பெண்கள் மற்ற துறைகளில் சாதிக்க முடிந்தால், அவர்களால் நாட்டையும் வழி நடத்த முடியும். இந்த மசோதா ஒரு மைல்கல்” என்றார்.