‘தல’ அஜீத் 2024-ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து நீண்ட மாதங்களுக்கு பைக் டூர் செல்லப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அஜீத் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் தயாராகும் ‘துணிவு’ படத்தில் நடித்து முடித்துவிட்டாராம். இதன் பேட்ச் ஒர்க் மட்டும் பாக்கி இருக்கிறதாம்.
இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். லைகா நிறுவனம் தயாரிக்கும் இதன் ஷூட்டிங் அடு்த்தாண்டு துவக்கத்தில் துவங்கவுள்ளது. இதன் பின்பான படத்தை இப்போதுவரையிலும் முடிவு செய்யாத அஜீத், இதன் பின்புதான் தன் ஆசைப்பட்டபடியே தன் பைக்கிலேயே உலகம் சுற்றப் போகிறாராம்.
இந்த பைக் டூர் அடுத்த 18 மாதங்களுக்கு இந்த டூர் நீடிக்க இருக்கிறதாம். இந்தக் காலக்கட்டத்தில் 62 நாடுகளுக்கு இந்த பைக் டூரில் பயணிக்க இருக்கிறாராம் அஜீத். இந்தச் சுற்றுப் பயணத்தில் அண்டார்டிகா உட்பட 7 கண்டங்களையும் தனது பைக்கிலேயே தொட்டுவிடப் போகிறார் அஜீத் என்கிறார்கள்.
அஜீத் சமீபத்தில், ‘துணிவு’ பட ஷூட்டிங்கில் கிடைத்த பிரேக்கில் தாய்லாந்தில் பைக் டூரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகளை மறந்து, உலகம் சுற்றுவதெல்லாம் ஒரு குடும்பத் தலைவரால் முடிகிற காரியமா..? என்றும் சிலர் கேட்கிறார்கள்.
அப்போ ‘தல’ கிளம்பும்போது இதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்..!