Thursday, April 11, 2024

“மக்கள், ‘லவ் டூடே’ படத்தை மறந்திடுவாங்க..”: இயக்குநர் சுசீந்திரன் அதிரடி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த ஆண்டு வெளியான “விக்ரம்”, “பொன்னியின் செல்வன்” போன்ற திரைப்படங்களை தொடர்ந்து அந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படம் “லவ் டூடே”.

இளைஞர் பட்டாளத்தைக் கவர்ந்த இப்படம், பெரும் வெற்றி பெற்றது.

ரூ. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கிட்டத்தட்ட 70 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனது. தமிழ்நாட்டில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கிலும் இத்திரைப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. 

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுசீந்திரன், சமீபத்திய பேட்டி ஒன்றில் “இந்த லவ் டூடே திரைப்படம் இந்த தலைமுறைக்கு மிகவும் ஈர்ப்பான திரைப்படமாக இருக்கும்.  இந்த தலைமுறைக்கேற்ற ஒரு ஜாலியான திரைப்படம். ஆனால்  ஐந்து வருடங்களுக்குப் பிறகு பார்த்தால் லவ் டூடே திரைப்படத்தை நம்மால் கனெக்ட் செய்துகொள்ள முடியாது.

காதல், 7ஜி ரெயின்போ காலனி போல, காலத்துக்கும் நினைவில் நிற்கும் படம் அல்ல.

ஆனால் அதை மீறி ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் ஜெயித்துக் காட்டிய பிரதீப் ரங்கநாதனை நினைக்க எனக்கு பெருமையாக உள்ளது.

லவ் டூடே படத்தோடு ஒப்பிடும்போது பிரதீப் ரங்கநாதனின் கோமாளி திரைப்படம்தான் சிறந்த திரைப்படம்” என சுசீந்திரன் அப்பேட்டியில் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News