‘ரெட்ரோ’ படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் ‘கருப்பு’ எனும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் சூர்யாவின் 45வது திரைப்படமாகும். இதில் திரிஷா அவருடன் நாயகியாக இணைந்துள்ளார். சூர்யாவின் பிறந்த சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

‘கருப்பு’ திரைப்படத்தை தொடர்ந்து, சூர்யா 46-வது படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.
இந்நிலையில், சூர்யாவின் பிறந்த நாளையொட்டி ‘சூர்யா 46’ படத்தின் அப்டேட் இன்று மாலை 4.06 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் நாக வம்சி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதேப்போல் படக்குழுவினர் சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் ஒரு ஸ்பெஷல் போஸ்டர்-ஐ வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.