தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர் சூர்யா. அதிரடி ஆக்சன் ஹீரோவாக வலம் வரும் இவர், நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் படங்களையும் அளித்து வருகிறார். சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதும் பெற்றார்.
வசந்த் இயக்த்தில் விஜய் மற்றும் அஜித் இணைந்து நடிக்க நேருக்கு நேர் என்கிற திரைப்படம் உருவானது. மணிரத்னம் அப்படத்தை தயாரித்தார். சில நாட்கள் இப்படத்தில் நடித்த அஜித் சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலகினார்.
அதன்பின், ஒருநாள் நடிகர் சிவக்குமாரை பார்க்க வசந்த் வந்தபோது சூர்யாவை பார்த்திருக்கிறார் வசந்த்.
அவரை நடிக்க அழைத்து இருக்கிறார். ஆரம்பத்தில் சிவகுமார், சூர்யா இருவருக்குமே இதில் விருப்பம் இல்லை. ஆனாலும் வற்புறுத்தி சூர்யாவை நடிக்க வைத்தார்.
அதன் பிறகு இன்று பிரம்மாண்டமான வளர்ச்சிதான் சூர்யாவுக்கு.
ஆனால், இதே சூர்யா நடிக்க முடிவெடுத்தபோது பல கேலி கிண்டல்களை சந்தித்தார். பட்டப்படிப்பை முடித்துவிட்டு அம்பத்தூரில் உள்ள ஒரு கார்மெண்ட்ஸில் 3 வருடங்கள் பணிபுரிந்தார் சூர்யா. அந்த நேரத்தில்தான் நேருக்கு நேர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
அதை தன்னுடன் கார்மெண்ட்ஸில் பணிபுரியும் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார் சூர்யா.
அவர்களோ, “நீ பேசுவதே குறைவு.. இந்த நிலையில் நீ நடிக்கப் போகிறாயா..” என கலாய்த்து இருக்கின்றனர்.
பிறகு, சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருது பெற்றவுடன், அந்த நண்பர்கள் நேரில் வந்து வியந்து பாராட்டினார்களாம்.
இந்த சம்பவத்தை சமீபத்தில் சூர்யாவே ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.