Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

அமீர் நாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படத்தை சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாநாடு’ படத்தின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து ‘ஜீவி-2’ படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ராஜா கிளி’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ என்கிற படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்த படத்தை தயாரித்துள்ளதுடன், அவரே இந்த படத்தை இயக்கியும் உள்ளார்.

இந்தப் படத்தில் அமீர், சாந்தினி ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணிய சிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – மூன் பிக்சர்ஸ், வெளியீடு – வி ஹவுஸ் புரொடக்சன், இயக்கம் – ஆதம்பாவா, இசை – வித்யாசாகர், ஒளிப்பதிவு – தேவராஜ், படத் தொகுப்பு ; சார்லஸ், பாடல்கள் – பா.விஜய், வசனம் –  பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா, தயாரிப்பு மேற்பார்வை – R.S.வெங்கட், நிர்வாக தயாரிப்பு – B.மகேஷ், பத்திரிகை தொடர்பு – A.ஜான்.

இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

- Advertisement -

Read more

Local News