Touring Talkies
100% Cinema

Friday, August 1, 2025

Touring Talkies

டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். இப்படத்தைப் பார்த்த பல திரைப்பட பிரபலங்கள், படத்தின் மீதும், இயக்குனர் அபிஷன் மீதும் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர். அதில் ரஜினிகாந்த், ராஜமவுலி, நானி, சுதீப் உள்ளிட்டோரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

நேற்று நடிகர் நானியை நேரில் சந்தித்ததைக் குறிப்பிட்ட அபிஷன், தற்போது நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த அனுபவத்தை தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.

“நான் சினிமாவிற்கு வந்ததின் முழு பலனை இன்று முழுமையாக உணர்கிறேன். அவர் என் பெயரைச் சொல்லி என்னைக் கட்டியணைக்கும் தருணத்தில் என் உடல் முழுவதும் புல்லரிக்கிறது. நான் சிறுவயதில் செய்த ஒவ்வொரு பிரார்த்தனையும், தாமதமாக வந்ததுபோல இருந்தாலும், அது எனக்குத் தேவைப்படும் நேரத்தில் சரியாக வந்தது போல அவர் புன்னகையிலிருந்தது. என்ன ஒரு மனிதர், எளிமையின் திருவடிவம். இந்த தருணத்தைவிட பெரிய தூண்டுதலும், ஆசீர்வாதமும் எனக்கு தேவையில்லை. என்றென்றும் உங்களை நேசிக்கிறேன் தலைவா ரஜினிகாந்த் சார்,” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News