Touring Talkies
100% Cinema

Thursday, April 10, 2025

Touring Talkies

அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெற்றி பெற God Bless U என சொல்லி வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கோவை செல்லும் போது, நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஒரு தூய்மையான அரசியல்வாதியும், நல்ல மனிதருமாக இருந்தார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிடப்படும்.

கூலி படம் சிறப்பாக உருவாகி வருகிறது.ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடங்கியுள்ளதுடன், அது எப்போது முடியும் என்பது இன்னும் தெரியவில்லை.ஜெயிலர்’ பாகம் 2-வின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. காட் ப்ளஸ் யூ என சொல்லி குட் பேட் அக்லி’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என அவர் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News