Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் படம் ‘எமகாதகி’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் வெங்கட் ராகுல், ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், படத் தொகுப்பாளர் ்ரீஜித் சாரங் மூவரின் தயாரிப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி.’

ஒரு பெண் முதன்மை நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், R.ராஜூ, சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் – வெங்கட் ராகுல், சுஜித் சாரங், ஸ்ரீஜித் சாரங், இயக்கம் –  பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன், ஒளிப்பதிவு – சுஜித் சாரங், படத் தொகுப்பு & கலரிஸ்ட் – ஸ்ரீஜித் சாரங், இசை – ஜெசின் ஜார்ஜ், கலை இயக்கம் – ஜோசப் பாபின், ஒலி வடிவமைப்பு –  Sync Cinema, ஒலிக் கலவை – அரவிந்த் மேனன், VFX. Paper plane vfx, சண்டை பயிற்சி இயக்கம் – முரளி.G ., பத்திரிகை தொடர்பு – சதீஷ் (AIM), விளம்பர வடிவமைப்பு – சிவகுமார் (Siva digital art)

திரைத்துறையில் தொழில் நுட்பக் கலைஞர்களாக,  கலையை நேசிக்கும் உண்மையான காதலர்களாக வலம் வருபவர்கள் நடிகர் வெங்கட் ராகுல், ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங், படத் தொகுப்பாளர் ்ரீஜித் சாரங். திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர்களை கலையும் சினிமா மீதான காதலும் நண்பர்களாக இணைத்துள்ளது.

ஒரு சந்திப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ்  ஜெயசீலன் கதையினை கேட்ட இந்த மூன்று நண்பர்களுக்கும் மிகவும் பிடித்துப் போகவே, இப்படத்தை தாங்களே இணைந்து தயாரிக்க முன்வந்துள்ளனர். சினிமா மீதான உன்னத காதலில், ஒரு தரமான படத்தை தரும் எண்ணத்தில், இப்படத்தை தயாரித்துள்ளனர்.

புதுமுகங்களால் உருவாகும் இப்படம் எந்தவித சமரசமுமின்றி முழுக்க, முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகனை அடுத்தத் தளத்திற்கு எடுத்து செல்லும் தரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

தஞ்சாவூரை சுற்றிய கிராமங்களில் இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் நடக்கும், சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் டீசர், டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று வெளியிட்டார். இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

Read more

Local News