Thursday, April 11, 2024

படங்களில் குத்தாட்டம் போட சன்னி லியோன் விதிக்கும் முக்கியமான நிபந்தனை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கனடா தேசத்து நடிகையான சன்னி லியோன் முதலில் ஆபாசப் படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர். ஒரு கட்டத்தில் அந்த மாதிரிப் படங்களில் நடித்தது போரடிக்கிறது என்று சொல்லிவிட்டு ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு இந்தியா வந்து மும்பையில் குடியேறினார்.

தொடர்ந்து சில ஆண்டுகளாக பாலிவுட்டிலும், தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். குத்தாட்டமும் ஆடி வருகிறார். இந்த நிலையில் சன்னி லியோன் திரைப்படங்களில் கவர்ச்சி நடனமாடும்போது படக் குழுவினருக்கு ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்துள்ளாராம்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் தொடர்ந்து பல படங்களில் குத்துப் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமாடி வருகிறேன். என்னைப் பற்றி யாருக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. படப்பிடிப்பில் நான் கவர்ச்சி நடனம் ஆடும்போது சுற்றுப்புறத்தில் குழந்தைகள் இருக்கக்கூடாது என்று கண்டிப்பாக கூறியிருக்கிறேன். ஏனென்றால் குத்துப் பாடல் நடனத்தில் நிச்சயம் வயது வந்தோர் காட்சிகள் இருக்கும். அப்போது சுற்றுப்புறத்தில் குழந்தைகள் இருந்தால் நானே தலையிட்டு படப்பிடிப்பை நிறுத்திவிடுவேன்” என்றார்.

அட.. சூப்பரா இருக்குல்ல..!

- Advertisement -

Read more

Local News