மணிரத்தினத்தை தான் திருமணம் செய்துகொண்ட காரணத்தை சுஹாசினி வெளிப்படுத்தி உள்ளார்.
“கே.பாலச்சந்தர் இயக்கத்தில் மனதில் உறுதி வேண்டும், சிந்து பைரவி போன்ற படங்களில் நடித்தேன். தனிப்பட்ட முறையிலும் எனக்கு அவர் அறிவுரை வழங்குவார்.
என் தங்கையின் திருமண பத்திரிக்கை கொடுக்க அவரது வீட்டிற்கு சென்றேன். அவர், ‘என்ன… மனதில் உறுதி வேண்டும் படத்தில் நடித்தால் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பியா? ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கோ’ என்று சொன்னார்.
பிறகுதான் நான் மணிரத்தினத்தை கல்யாணம் செய்து கொண்டேன்” என்று சுஹாசினி தெரிவித்து உள்ளார்.