Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

‘சூரரைப் போற்று’ – தியேட்டர்களில் வெளியாகிறது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று’ திரைப்படம் தியேட்டர்களில் திரையிடப்படலாம் என்று தெரிகிறது.

நடிகர் சூர்யாவின் சொந்தத் தயாரிப்பில் சென்ற ஆண்டு வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படம் ஓடிடியில் வெளியானாலும் படம் பார்த்தவர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது.

கடந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான போட்டியிலும் சிறந்த படத்திற்கான பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய படம் இதுதான்.  மேலும் உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் இத்திரைப்படம் கலந்து கொண்டு பரிசுகளை வென்றது.

ஓடியில் வெளியிட்டதால் அதிகமான மக்கள் இந்தப் படத்தை இப்போதுரையிலும் பார்க்காத சூழல்தான் இருந்து வருகிறது. இதைப் போக்குவதற்காக தற்போது 50 சதவிகிதம் ரசிகர்களுக்கு அனுமதி என்ற நிலையிலும் இந்த ‘சூரரைப் போற்று’ படத்தை திரையரங்குகளில் வெளியிடலாம் என்று அந்த பட நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இதற்காக தியேட்டர் உரிமையாளர்களிடத்தில் 2டி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். மேலும் இந்தப் படத்தின் மூலம் வசூலாகும் பணத்தை அப்படியே தியேட்டர்காரர்களும், தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினரும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் புது மாதிரியான ஒரு சலுகையை சூர்யா தரப்பினர் முன் வைத்துள்ளனராம்.

தியேட்டர்காரர்கள் ஏற்கெனவே தங்களது வேண்டுகோளையும் மீறி இந்தப் படத்தை ஓடிடிக்கு கொடுத்ததினால் சூர்யா படங்களுக்கு மறைமுகமாகத் தடை விதித்துள்ளனர்.

“இந்தத் தடையால் எதிர்காலத்தில் தங்களது குடும்பத் திரைப்படங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக இந்தப் படத்தைத் தியேட்டர்காரர்கள் கைகளில் கொடுக்கிறார் சூர்யா…” என்கிறார்கள் திரையுலகத்தினர்.

சூர்யாவின் இந்தக் கோரிக்கை பற்றி, தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினர் மிக விரைவில் தங்களது சங்கத்தினரிடம் கலந்து பேசி முடிவெடுப்பார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -

Read more

Local News