அலுத்துக்கொள்ள வேண்டாம்.. பராசக்தி படம் பற்றி இன்னமும் பல செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்போது புதிய விசயம் ஒன்று.
ஆம்.. கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் மு. கருணாநிதி வசனம் எழுத சிவாஜி கணேசன் அறிமுகமான படம் என்பது நமக்குத் தெரியும்.
அதே போல படத்துக்கு எதிர்ப்புகள் ஏற்பட்டதும் தெரியும்.
ஆனால் சிலர் இப்படத்தை எதிர்ப்பதோடு நிற்கவில்லை.. அப்போதைய முதலமைச்சருக்கும் கடிதம் எழுதினார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்!
திரைத்துறை பற்றி கட்டுரைகள் எழுதிவரும் சுபகுணராஜன் என்பவர் சமீபத்தில் வார இதழில் எழுதிய கட்டுரையில் இருந்து..
“அந்த காலகட்டத்தில் தமிழன் என்ற இதழ் ஒன்று வெளியாகி இருந்தது. இதன் ஆசிரியராக இருந்தவர், தலை கோரி. ( பெயரே அதுதான்.) பராசக்தி படத்தைப் பார்த்து பதறிய இவர், அப்போதைய முதலமைச்சர் ராரஜாஜிக்கு கடிதம் எழுதினார். அதில், ‘சமுதாயத்தை சீரழிக்கும் இப்படத்தை தடை செய்ய வேண்டும்” என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.
அதே போல கொச்சி மாகாண முன்னாள் நீதிபதியும் கத்தோலிகர் சங்க தலைவருமான பரம்பி லோனப்பனும் முதலமைச்சர் ராஜாஜிக்கு கடிதம் எழுதினார். அதில், “பராசக்தி படம் கம்யூனிச சிந்தனையை விதைக்கிறது. இதனால் மக்கள் கிளர்ச்சியில் ஏற்பட ஆரம்பித்துவிடுவார்கள். ஆகவே உடனடியாக இப்படத்தை தடை செய்ய வேண்டும்” என்று எழுதி இருந்தார்.
தவிர, அப்போது பிரபலமாக இருந்த தொழிலதிபர் சேலம் சின்னச்சாமி என்பவர், “பராசக்தி படம் பெண்களை சீரழித்துவிடும். அவர்களிடம் தவறான எண்ணங்களை விதைத்துவிடும். ஆகவே படத்தை ஓடவிடக்கூடாது” என்று பதைபதைத்து தெரிவித்து இருந்தார்.
இப்படி பலர்… முக்கிய பிரமுகர்கள்.. பராசக்தி படத்தை எதிர்த்தனர்” என குறிப்பிட்டு இருக்கிறார் தானே கைப்பட எழுதி பராசக்தி படம் கம்யூனிச புரட்டியை உண்டாக்கிவிடும் தடை செய்ய வேண்டும் என எழுதினார்கள்.
யப்பா.. எத்தனை எத்தனை எதிர்ப்புகளை மீறி, இக்காலத்திலும் பேசப்படுகிறது பராசக்தி!