Wednesday, October 23, 2024

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே… மெய்சிலிர்க்க வைக்கும் அமரன் பட டிரெய்லர் வெளியானது! #AMARAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தில் ‘முகுந்தன்’ என்ற பெயரில் ஒரு ராணுவ வீரராக நடித்துள்ளார். மேலும் புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் போன்ற முக்கிய நடிகர்களும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

‘அமரன்’ திரைப்படம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு, அக்டோபர் 31-ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் ஜி.வி.பிரகாஷின் 700-வது பாடலாகவும், இப்படத்தின் முதல் பாடலாகவும் இருக்கும் ‘ஹே மின்னலே’ பாடல் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில், படத்தின் விளம்பரப் பணிகள் இப்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இப்போது ‘அமரன்’ படத்தின் டிரெய்லரும் வெளியாகி இருக்கிறது. இந்த டிரெய்லரை பான் இந்தியா நட்சத்திரங்கள் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக தமிழில் கமல் ஹாசன், மலையாளத்தில் டோவினோ தாமஸ், தெலுங்கில் நானி, இந்தியில் அமீர்கான், கன்னடத்தில் சிவராஜ் குமார் ஆகியோர் ‘அமரன்’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News