Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு கால்ஷீட் சொதப்பலால் சிக்கல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா லாக் டவுனுக்குப் பிறகு உடனடியாக தான் நடித்து வரும் 2 படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால், விதி யோகிபாபு வடிவத்தில் சிவகார்த்தியை பார்த்து சிரிக்கிறது. ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் போட்டு நடித்தும் யோகிபாபுவால் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு சொன்ன நாளில் வர முடியவில்லையாம்.

யோகிபாபு இப்போது நடிப்பதெல்லாம் மிடில் கிளாஸ் படங்கள் என்பதால் அந்தந்த படங்களில் அவர்தான் பிரதானமாக இருக்கிறார். அவர் இல்லாத காட்சிகளே குறைவு என்பதால் அவர் தினமும் ஏதாவது ஒரு படப்பிடிப்பில் இருந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ‘டாக்டர்’ படப்பிடிப்பு தடைபட்டு சிவகார்த்திகேயனுக்கு தலைவலி ஆரம்பித்துள்ளதாம். இந்த ‘டாக்டர்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு உடனேயே இயக்குநர் ரவிக்குமாரின் ‘அயலான்’ படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் சிவகார்த்திகேயன்.

அந்த ‘அயலானில்’ சிவாவுக்காக ராகுல் ப்ரீத் சிங் வெயிட்டிங்காம். அம்மணி இப்போது தெலுங்கில் மாடலாடிக் கொண்டிருப்பதால் அவரும் ரொம்ப பிஸி. சிவா சொன்ன டயத்துக்கு வரவில்லையெனில் ராகுலின் கால்ஷீட் வீணாகும். பின்பு ‘அயலான்’ தள்ளிப் போகும் நிலைமைக்குப் போகும் என்பதால் இரண்டு பட கலைஞர்களும் யோகிபாபுவை, ‘சீக்கிரமா வந்துரு சாமி’ என்று வேண்டி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பக்கம் சிவகார்த்திகேயனுக்கு இந்த சிக்கல் என்றால், வரும் அட்வான்ஸ்களையெல்லாம் வாங்கிப் போட்டு, நட்புக்காக கேட்டவர்களுக்கெல்லாம் கால்ஷீட்டை வாரி வழங்கிய ‘நவீன தர்மதுரை’ விஜய் சேதுபதியும், இப்போது இந்த கால்ஷீட் சிக்கலில் மாட்டியிருக்கிறார்.

அவருடைய நடிப்பில் உருவாகிக் கொண்டிருந்த ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் அப்படியே அந்தரத்தில் நிற்கிறது. விஜய் சேதுபதி வந்தால்தான் படம் கொஞ்சமேனும் நகரும். விஜய் சேதுபதியோ தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து பெரும் தொகையை முதலீடு செய்திருக்கும் ‘லாபம்’ படத்திற்கும் ‘அனபெல் சுப்ரமணியம்’ படத்திற்கும் இடையே ஓடி, ஓடி உழைத்தபடியே இருக்கிறார்.

‘துக்ளக் தர்பாரில்’ விஜய் சேதுபதியின் தர்பார் என்றைக்கு துவங்கும் என்பது அவருக்கே தெரியாது என்பதுதான் சோகம்..!இன்றைய தமிழ்ச் சினிமாவின் முன்னணி நாயகர்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவருமே இப்படியொரு கால்ஷீட் சிக்கல்களால் இப்போது மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள்..!

- Advertisement -

Read more

Local News