இன்று உலகமெங்கும் வெளியான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை அனிருத் அமைத்துள்ளார்.
படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும், சிவகார்த்திகேயன் படத்திற்காக செய்த உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவர் மிகுந்த உற்சாகத்துடன் ஜிம்மில் பயிற்சி செய்கிறார். இடையே அவரது மகன் குகனும் இணைந்து அவருடன் உடற்பயிற்சி செய்வது வீடியோவில் இடம்பெற்றுள்ளது. அது ரசிகர்களுக்கு மிகவும் க்யூட்டாக தோன்றியுள்ளது. இப்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.