தெலுங்கு இயக்குநரான அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும், உக்ரைனை சேர்ந்த மரியா என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 31, விநாயகர் சதூர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கெனவே கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ திரைப்படமானது விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது.
இதனால், சிவகார்த்திகேயனின் படமும், கார்த்தியின் ‘விருமன்’ படமும் ஒரே நாளில் மோதுவது உறுதியாகியுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி கார்த்தியின் ‘தம்பி’ படமும், சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படமும் ஒரே நாளில் வெளியானது. அப்போது அந்த இரு படங்களுக்கும் நல்ல பெயர் கிடைத்தது.
இப்போது, மீண்டும் இருவரின் படங்களிளும் ஒரே நாளில் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.