செந்தில், ராஜலட்சுமி தம்பதியர் இன்று நட்சத்திர பாடகர்கள். குறிப்பாக புஷ்பா திரைப்படத்தில், ஏ சாமி என்ற பாடலை ராஜலட்சுமி பாடியதில் இருந்து அகில இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார்.
தம்பதியர் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில், “ஆரம்பத்தில் பணத்துக்கு ரொம்பவே சிரமப்பட்டோம். நிகழ்ச்சிகள் நிறைய வர ஆரம்பிச்ச போது, ஒவ்வொரு ஊருக்கும் வாடகை வாகனங்கள் ஏற்பாடு செய்து போறது சிரமமா இருந்துச்சு. பிறகு தவணை முறையில முதல் கார் டயோட்டா.. 2014ல் வாங்கினோம்.
இன்னும் நிகழ்ச்சிகள் அதிகமான சூழல்ல.. அந்த காரை வச்சு போக முடியலை. மறுபடி திட்டமிட்டு, தவணை முறையில பெரிய கார் வாங்கினோம். இது எல்லாத்துக்குமே காரணம்.. திட்டமிடலும், விடாமுயற்சியும்தான்.. உழைப்பு என்னைக்குமே நம்மை கைவிடாது” என்றார்கள் தம்பதியர்.