ன்னக்குயில் சித்ரா என்றாலே போதும், பலருக்கும் அவர் பாடிய பாடல்கள் மனதில் வந்து போகும். அந்த அளவிற்கு சிறப்பான பாடல்கள் பல பாடியுள்ளவர்.
இவர், 1985-ம் ஆண்டு வெளியான சிந்து பைரவி படத்தில் இளையராஜா இசையில் நானொரு சிந்து என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், கங்கை அமரன், சங்கர் கணேஷ், எம்.எஸ்.வி, தேவா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். 6 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
இந்தநிலையில் பாடகி, தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது, படத்தில் ’பாடறியேன் படிப்பறியேன்’ பாடலை பாட மறுத்ததாக கூறப்படுகிறதே” என்று கேட்கப்பட்டது.
அதற்கு சித்ரா, “பாட முடியாது என்று சொல்லல. என்னை ’நானொரு சிந்து’ பாட்டு பாடத்தான் இளையராஜா சார் கூப்பிட்டாரு, காலையில் அந்த பாடலை பாடி முடிச்சிட்டேன். மாலையில் எங்க அப்பா டிரெயின் புக் பண்ணியிருந்தார். அதனால் நாங்க கிளம்பிக்கிட்டு இருந்தப்பா ராஜா சார், ‘இன்னொரு பாட்டு இருக்கு பாடிட்டு போக முடியுமா’னு கேட்டார். அப்போ அப்பா, ‘சித்ராவுக்கு நாளைக்கு எம்.ஏ முதலாம் ஆண்டு எக்ஸாம் இருக்கு’னு சொன்னார்.
அதற்கு ராஜா சார், ‘எம்.ஏ எல்லாம் அப்புறம் பண்ணிக்கலாம், அதுக்கு மேல இதுல வரப்போகுது’னு சொன்னார்.
ராஜா சார் சொல்லும்போது தவிர்க்க முடியல, அந்த பாட்டை பாடிட்டு போனேன், அதனால் எம்.ஏ எக்ஸாம் எழுதல. அதோடு படிப்பை விட்டுவிட்டேன்” என்றார் சித்ரா.