Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

‘சிம்டாங்காரன்’ டிரைலரை இயக்குநர் கோபி நயினார் வெளியிட்டார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆக்ஷன் திரில்லர் படமாக கடந்த ஆண்டு ‘ஆபீசர்’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம்தான் ‘சிம்டாங்காரன்’ என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் நாகர்ஜுனா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு மகளாக பேபி காவியா அறிமுகமாகி இருக்கிறார். மற்றும் இவர்களுடன் மைரா ஷெரின், அன்வர்கான், ஷாயாஜி ஷிண்டே ஆகியோரும் நடித்துள்ளனர்.

மும்பையில் நடக்கும் தொடர் கொலைகளுக்கு மும்பையின் போலீஸ் அதிகாரி பசாரிதான் காரணம் என சந்தேகத்தில் மும்பை உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து அவர்மேல் விசாரணை கமிஷன் அமைக்கிறது.

அவ்வழக்கை விசாரிக்க சென்னையை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான சிவாஜி கணேசனை(நாகார்ஜுனா) நியமிக்கிறார்கள். பசாரிக்கு தண்டனை வாங்கி தரும் சிவாஜிகணேசன் குடும்பத்தை பசாரி அழிக்க சிறையில் இருந்தே முயற்ச்சிக்கிறார். இறுதியில் சிவாஜி தன் குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதை தன் சுவாரசியமான திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார்  ராம் கோபால் வர்மா.

‘உதயம்’ படத்திற்கு பிறகு சுமார் இருப்பது வருடங்கள் கழித்து ராம்கோபால் வர்மா, நாகர்ஜுனா இருவரும் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இசை – ரவிசங்கர், பாடல்கள் – நிகரன், நாகா , வசனம் எழுதி தமிழாக்கம் செய்துள்ளார் மே.கோ.உலகேசுகுமார்.

VVG production pvt ltd சார்பாக மேட்டூர்.பா.விஜயராகவன் மற்றும் ரேணுகா மகேந்திரபாபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டிரைலரை வெளியிட்ட ‘அறம்’ படத்தின் இயக்குநர் கோபி நயினார் டிரைலர் மிகவும் சிறப்பாக உள்ளது என்று பாராட்டினார்.

படம் திரையரங்குகள் திறந்த பின்னர் வெளியாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News