சிம்புவை அதிரவைத்த இயக்குனர்!

மாநாடு படத்துக்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் சிம்புவின் பத்துதலை படம்.

ஞானவேல் ராஜாத தயாரிப்பில் கிருஷ்ணா இயக்குகிறார். படப்பிடிப்பு நிறைவடந்ததுடன், ஆடியோ விழாவும் நடந்து முடிந்தது.

இந்நிலையில், கிருஷ்ணா ஒரு தகவலை பகிர்ந்துகொண்டு உள்ளார்.

“ பத்துதல படத்தில் வரும் கதாபாத்திரத்திற்கு சிம்பு சற்று உடல் பருமனாக இருக்க வேண்டும் என்பதால் உடல் எடையை அப்படியே வைத்து அந்த படத்தில் நடித்துவிட்டார். அதன் பிறகு அவர் மாநாடு படத்தில் நடிக்க வேண்டி இருந்தது. மாநாடு திரைப்படத்திற்காக உடல் எடையை வெகுவாக குறைத்தார் சிம்பு.

மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இந்த சமயத்தில் நான் சிம்புவிடம் வந்து பத்துதல படத்தின் விடுப்பட்ட சில காட்சிகளை எடுக்க வேண்டும். அதற்காக உங்கள் எடையை அதிகரிக்க வேண்டும் என்றேன்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிம்பு, மனசாட்சி இல்லாம கேக்குறீங்களேயா, ஒவ்வொரு கிலோ எடையை குறைக்கவும் நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும். ரெண்டு வேளை மட்டும் சாப்பிட்டு உடம்பை குறைச்சிருக்கேன் என்றார்.

ஆனாலும் சிரமப்பட்டு எடையைக் குறைத்து நடித்தார்” என்றார் கிருஷ்ணா.