லோகேசை பாராட்டிய சிம்பு!

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து சிம்பு பத்து தல படத்தில் நடித்துள்ளார். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் போன்ற பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகின்ற 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

முதலில் பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. கேமியோ தோற்றத்தில் நடிக்க வந்த சிம்புவும் இப்போது கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இது குறஇத்து, சிம்பு பேசுகையில் “பத்து தல படத்தில் பல பிரபலங்கள் நடித்திருந்தாலும் எல்லோருக்குமே சமமான கதாபாத்திரத்தை இயக்குனர் கொடுத்துள்ளார். அதேபோல் தான் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்திலும் எல்லா கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.  லோகேஷின் படங்கள் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அமைந்துள்ள” என்று புகழ்ந்தார்.

இதையடுத்து லோகேஷ் இயக்கத்தில் சிம்புவும் நடிப்பாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.