Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

ஜீவன் – நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘ சிக்னேச்சர்’.

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘யாயா’, ‘பக்ரீத்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘M10 PRODUCTIONS’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் M.S.முருகராஜ் தயாரிக்கும் 3-வது படம் ‘சிக்னேச்சர்’.

இந்தப் படத்தில் ஜீவனும், நட்டி நட்ராஜும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

இவர்களுடன் இளவரசு, ஹரிஷ் பெராடி, மன்சூர் அலிகான், ஜார்ஜ், மாறன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக முன்னணி நடிகர் ஒருவரும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

ஒளிப்பதிவு – சீனிவாசன் தயாநிதி, சண்டைப் பயிற்சி இயக்கம் – திலீப் சுப்பராயன், நடனப் பயிற்சி இயக்கம் – கல்யாண், தினேஷ், படத் தொகுப்பு- கலை, திரைக்கதை- பொன் பார்த்திபன், கலை இயக்கம்- மைக்கேல், பத்திரிகை தொடர்பு – ஜான்ஸன்.  

இத்திரைப்படத்தை பக்ரீத்’ படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்குகிறார்.

நாம் வைக்கிற ஒவ்வொரு கை நாட்டும் எவ்வளவு முக்கியமானது. அந்த கை நாட்டை பயன்படுத்தி, அவங்க தலையெழுத்துல தாளம் போடுறதுதான் இந்த சிக்னேச்சர்’ படத்தின் கதைக் கரு.

இந்தப் படத்தில் சாமானிய மக்களோடு பழகி அவர்களின் ரகசிய தகவல்களைத் திருடும் கேரக்டரில்  ‘திருட்டுப் பயலே’ ஜீவன் நடிக்கிறார். அதே டேட்டா வை பயன்படுத்தி மக்களை வேட்டையாடுபவராக, ’சதுரங்க வேட்டை’ நட்டி நடிக்கிறார். இவர்கள் இணைந்து செய்யும் ‘சீட்டிங்’தான் இந்த ‘சிக்னேச்சர்’ படத்தின் திரைக்கதையின் சுவாரசியம்.

விநாயகர் சதுர்த்தியான இன்றைக்கு இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. இன்றைய முதல் நாள் படப்பிடிப்பில்  நாயகர்கள் ஜீவன், நட்டி நட்ராஜ் இருவரும் லந்து கொண்டார்கள்.

இயக்குநர் ஹரி இந்தப் பூஜை நிகழ்வில் கலந்து கொண்டு கிளாப் அடித்துப் படத்தைத் துவக்கி வைத்தார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக சென்னை, மும்பை மற்றும் துபாய் போன்ற பல இடங்களில் நடைபெறுகிறது.

- Advertisement -

Read more

Local News