Thursday, April 11, 2024

பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கும் ஸ்ருதிஹாசன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஸ்ருதிஹாசன் தன் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் முதன்முதலாக நடிக்க வந்தபோது அவரது மூக்கு வேறு மாதிரி இருந்தது. அதன் பின்பு வந்த படங்களில் அவரது மூக்கு வேறு தோற்றத்தில் இருந்தது. அது அவரது அழகைக் கூட்டியது.

இதனாலேயே ஸ்ருதி ஹாசன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன் மூக்கை அழகாக்கியிருக்கிறார் என்று சில ஆண்டுகளாகவே திரையுலகத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தற்போது இந்த விஷயத்தை உண்மை என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்.

“ஆமாம். என் மூக்கை நான் அறுவை சிகிச்சை மூலமாக சரி செய்தேன். என் மூக்கு உடைந்துவிட்டது. அந்த மூக்குடன்தான் முதல் படத்தில் நடித்தேன். அதன் பிறகுதான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மூக்கை சரி செய்தேன். என் முகம், நான் ஏன் செய்யக் கூடாது.

நான் ஏன் அப்படி செய்தேன் என்று யாருக்கும் விளக்கம் அளிக்கத் தோன்றவில்லை. செயற்கை முறையில் எதையும் செய்வதை நான் ஊக்குவிப்பது இல்லை. இன்று ஒரு கேள்வி கேட்பார்கள். நாளை வேறு கேள்வி கேட்பார்கள். இதனாலேயே நான் இதுவரையிலும் இதை வெளியில் சொல்லவில்லை…” என்று சொல்லியிருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.

“பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதை பெரும்பாலும் பல நடிகைகள் ஒப்புக் கொள்வது இல்லை. இந்நிலையில் நீங்கள் தைரியமாக பேசியதை பாராட்டியே ஆக வேண்டும். யார் என்ன சொன்னால் என்ன.. உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் ஸ்ருதி” என்று ஸ்ருதியின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News