Sunday, August 25, 2024

துப்பாக்கி சூடு: விஜய் பட வில்லனை தேடும் போலீஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடித்த பத்ரி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பூபிந்தர் சிங். இந்தியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும்  பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர்.

 

உத்தர பிரதேசம் பிஜ்னோர் பகுதியில் குடியிருக்கிறார். இவருக்கும் அருகில் இருக்கும் குர்தீப் சிங் என்பவருக்கும் மரம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. குர்தீப் சிங்கின் தோட்டம் பூபிந்தர் சிங் இல்லத்திற்கு அருகில் இருப்பதால், தோட்டத்தில் இருக்கும் யூகலிப்டஸ் மரம் வெட்டுவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பிரச்சனை முற்றிய நிலையில்  பூபிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்களும் உரிமம் பெற்ற ரிவால்வர் மற்றும் சட்டவிரோத துப்பாக்கியுடன் குர்தீப் சிங்கின் குடும்பத்தினரை சுட்டுள்ளனர்.

 

அதில் குர்தீப் சிங் மகன் கோவிந்த் (23) உயிரிழந்தார். மேலும் குர்தீப் சிங், அவரது மனைவி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து துப்பாக்கி சூடு சம்பவத்தை அறிந்த டிஐஜி, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தகவல்களை பெற்று பூபிந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தார். மற்றவர்களை தேடிவருவதாக கூறியுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News