Thursday, April 11, 2024

ஜெமினி கணேசன் குறித்து மகள் தெரிவிக்கும் அதிர்ச்சி நியூஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன்  நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னனாக இருந்தார் என்பது நமக்குத் தெரியும். அவர் குறித்த ஒரு தகவலை அவரது மகளும், மருத்துவருமான கமலா செல்வராஜ் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்:

“அப்பா மீது பல இளம் பெண்கள் கிரஸ்ஸாக இருந்தனர். எங்கள் வீட்டின் முன்பு எப்போதும் ஏராளமான பெண்கள் நிற்பார்கள். அதில் பலரும் அப்பாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அடம்பிடிப்பார்கள்.

என்னுடைய தத்தா அவர்களுக்கு புத்திமதி சொல்லி அவர்களை அவர்களின் வீட்டிற்கு கொண்டுபோய் விடுவார். இது போன்ற சம்பவங்கள் பலமுறை நடக்கும். அப்படி வரும் பெண்களிடம் ‘எனக்கு திருமணம் ஆகிவிட்டது. நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். வேறு ஒரு நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என என் அப்பாவும் பல பெண்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளார்’ என கமலா செல்வராஜ் தனது அப்பா ஜெமினி கணேசன் பற்றி பேசியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News