சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சுஹாசினி மணிரத்தினத்திடம் தன்னுடைய ஆரம்ப கால சினிமா வாழ்க்கை பற்றி பகிர்ந்து இருந்தார் சோபனா.
“1989இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நான் நடித்த திரைப்படம் சிவா. இந்த படத்தில் ‘இரு விழியின் வழியே நீயா வந்து போனது’ என்ற ஒரு பாடல் இருக்கும். அந்த படப்பிடிப்பின் போது எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஒரு டிரான்ஸ்பரன்ட் சேலையை கொண்டு வந்து என்னிடம் கொடுத்துவிட்டு, அடுத்த பத்து நிமிடத்தில் பாடல் காட்சி எடுக்கப்படும் என்று கூறிவிட்டார்கள். நான், அந்த சேலையை பார்த்தே இது மழையில் எடுக்கப்படும் பாடல் ஆகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.
கைவசம் வேறு எந்த துணியும் என்னிடம் இல்லை, 10 நிமிடத்திற்குள் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும்.
என்ன செய்வது என யோசித்த நான், அங்கிருந்த மேஜையில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து உள்ளே கட்டிக்கொண்டு அதற்கு மேலே புடவை கட்டினேன். ஒரு வழியாக இப்படி அந்த காட்சியில் நடித்து முடித்தேன்” என கூறினார் சோபனா.