மைனா உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபு சாலமன் இன்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர், “தேவர் மகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருந்த நேரம்.
சிவாஜி கணேசனிடம், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமை அறிமுகப்படுத்தினார் கமல்.
ஸ்ரீராமை ஏற இறங்க பார்த்த சிவாஜி, ‘ஓ.. நீதான் கதாபாத்திரத்துக்கு லைட் வையின்னு சொன்னா, வெங்கல பாத்திரத்துக்கு லைட் வைக்கிறவனா’ என்று கேட்க… யூனிட்டில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்” என்றார்.
தான் நடிக்காத படங்களையும் பார்ப்பதோடு, கவனத்துடன் மனதில் குறித்து வைத்துக்கொண்டு இருந்திருக்கிறார் சிவாஜி!