நடிகர் திலகம் சிவாஜி குறித்து மருது மோகன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இதில சிவாஜி குடும்பத்தினர், ரஜினி, கமல், இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய இளையராஜா, “ இயக்குனர் எஸ்.பி,முத்துராமன், ‘கலையுலகம் சார்பில் சிவாஜிக்கு ஒரு பரிசு அளிக்க வேண்டும். அது குதிரையில் ஏறி சிவாஜி உட்கார்ந்திருக்கும் விதமாக இருக்க வேண்டும்’ என்றார்.
இதற்காக கமல், ரஜினியிடம் நிதி வசூல் செய்துவிட்டு என்னிடம் வந்தார்.
உடனே நான், ‘ இந்த சிலையில் யார் பெயரும் இருக்கக் கூடாது’ என கருதி அதற்கான மொத்த பணத்தையும் நானே கொடுத்தேன்.
சிலையை பெற்றுக் கொண்ட சிவாஜி அவரது மனைவியிடம், ‘யாரை மறந்தாலும் கடைசி வரை இளையராஜாவை மட்டும் மறக்கக் கூடாது’ என்றார்.
இதை பெருமைக்காக சொல்லவில்லை. எந்த அரசும் கலையுலகமும் செய்யாத மரியாதையை நான் தனி ஒருவனாக செய்து காட்டியிருக்கிறேன், இதுவரை யாருக்கும் தெரியாத விஷயம் இது ’ என்று கண்கலங்கி பேசினார் இளையராஜா.