‘பதான்’, ‘ஜவான்’ படங்களுக்குப் பிறகு நடிகர் ஷாருக் கான் நடித்து வரும் படம் ‘கிங்’. இதில் அவருடன் சுகானா கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை ஷாருக் கானின் சொந்த நிறுவனம் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்து வருகிறது. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார்.
சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் 2026ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், நேற்று ஷாருக் கானின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘கிங்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த அந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

