டங்கி டிராப் 3 நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் நேற்று வெளியிடப்பட்டது, இந்த பாடல் இந்தியா முழுதும் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. பழைய ஞாபகத்தைத் தூண்டியது, காலப்போக்கில் உருவான புதிய நண்பர்கள் காலத்தில் இழந்த நண்பர்கள் என பல நினைவுகளை கிளறிவிட்டுவிட்டது என, டங்கி படத்தின் சமீபத்திய பாடலான நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் பற்றி ஷாருக்கான் பகிர்ந்திருக்கிறார்.
டங்கி டிராப் 3 நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் நேற்று வெளியிடப்பட்டது, இந்த பாடல் இந்தியா முழுதும் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. பாடல் மீதான ரசிகர்களின் அன்பின் வெளிப்பாடு சமீபத்திய ஷாருக்கான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளிப்படுத்தினார்.
சிறந்த எதிர்காலத்தையும் வாய்ப்புகளையும் தேடி வீட்டை விட்டு வெளியேறிய கணத்தையும், அன்புக்குரியவர்களை விட்டுச் சென்ற கணத்தையும் ஒவ்வொருவருக்கும் நினைவூட்டும் வகையில், இந்த பாடல் பார்வையாளர்களுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரும் உணர்வைத் தூண்டும் வகையில், இந்த பாடல் உண்மையில் தங்கள் வீட்டைத் தவறவிட்டு, அதை விட்டு விலகி இருப்பவர்களின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு கீதமாக இருக்கும் என்றார் ஷாருக்கான்.