Wednesday, April 10, 2024

திரைவிமர்சனம்: டங்கி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜ்குமார்  ஹிரானிபிலிம்ஸ்சார்பில்  ராஜ்குமார்ஹிரானி, கவுரிகான், ஜோதிதேஷ் பாண்டே தயாரிப்பில் டாப்ஸிபன்னு, ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் டங்கி.

விக்கிகவுஷல், பொம்மன்இரானி, அபிஜத்தோஷி, ஆகியோருடன் இணைந்து எழுதி இருப்பதோடு, படத்தொகுப்பும் செய்து ராஜ்குமார்ஹிரானி  இயக்கியிருக்கிறார்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்தியாவில் பஞ்சாபில் இருந்து லண்டனுக்கு நிறைய தொழிலாளர்கள் போகிறார்கள். அவர்கள் அங்கேயே தங்கி விடுகின்றனர்.  அவர்களின் சொந்தங்கள் லண்டன் போவதும் செட்டில் ஆகிறது.

பஞ்சாப் கிராம மக்கள் இதைப் பெருமிதமாக எடுத்துக் கொண்டு ‘நாங்கள்லாம் லண்டன் காரங்க..’என்று பெருமிதப்படுகின்றனர்.

1962 ஆம் ஆண்டில் இந்த சலுகைகளை எல்லாம் இங்கிலாந்து ரத்து செய்கிறது. வசதி இல்லாதவர்கள், ஆங்கிலம் தெரியாதவர்கள்   போக முடியாது என்ற சூழ்நிலை ஏற்படுகிறது.

ஒரு ராணுவ வீரனைக் காப்பாற்றியதால் தனது அண்ணனை இழந்து தாங்கள் வாழ்ந்த பெரிய வீட்டையும் இழந்து , அந்த வீட்டை மீட்க ஆசைப்படும் மனு ரந்தாவாக  டாப்ஸி நடித்துள்ளார்.  மற்றும் சிலர் லண்டன் போக ஆசைப்பட, பணத்தை இழந்து விடுகின்றனர்.

அதனால் அந்த ஊர் நபர் ஒருவர் தனது காதலியை பார்க்கப் போக முடியாமல் போகிறது. ஆனால் அந்த அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்கிறார். அதை அறிந்து லண்டன் போக முடியாமல் போன  அவரும்  விக்கி கவுஷல் தற்கொலை செய்து கொள்கிறார்.

அண்ணனால் காப்பாற்றப்பட்ட ராணுவ  மேஜராக  ஷாருக் கான். அவர்களை சட்ட விரோதமாக  லண்டன் கொண்டு போக முயற்சிக்கிறார்.

மொத்தக் கதையும் பிளாஷ்பேக் ஆக காட்டுகிறார்கள்  மீதி நடந்தது என்ன என்பதே கதை.

ஆங்காங்கே கொஞ்சம் சட்டை காட்சிகள் இருந்தாலும் இது அந்த மாதிரி படம் இல்லை. உலகம் ஒன்றே என்ற விஷயங்களைப் பேசும் படமாக அமைந்துள்ளது.

காமெடி, டெண்டிமெண்ட்ம், ஆக்‌ஷன் என கதையும் வசனங்களும் அற்புதமாக அமைந்திருக்கிறது.

முரளிதரன், மனுஷ் நந்தன், அமித் ராய், குமார் பங்கஜ் ஆகியோரின் ஒளிப்பதிவும் ப்ரீதம் அமன் பந்த் ஆகியோர் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.

டாப்ஸி,ஷாருக்கான் இருவரும் நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர்.

விக்கி கவுஷல் மரணம், நீதிமன்ற காட்சி, என்று பல அருமையான அழுத்தமான கேரக்டர்கள்.

ராணுவமேஜராகஇருந்தகாரணத்தால்எந்தசூழ்நிலையிலும்நாட்டைவிட்டுக்கொடுக்கவிரும்பாதஷாருக்கானின்கதாபாத்திரம், வீட்டைமீட்க

போராடும் பன்னு இருவருக்கும் இருக்கும் காதல் என்று கதாபாத்திரங்களின் வடிவமைப்பில் நேர்த்தியை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

படம் நண்பர்கள் மற்றும் அகதிகள் பிரச்சனை பற்றிப் பேசியிருக்கிறார்.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்துடன் கலம் இறங்கியிருக்கும் டங்கி  பார்த்து ரசிக்கலாம்.

 

- Advertisement -

Read more

Local News