திரை விமர்சனம்: பியூட்டி

ஓம் ஜெயம் தியேட்டர் சார்பில் ஆர்.தீபக் குமார் தயாரித்து ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் ‘பியூட்டி’. அறிமுக இயக்குநர் கோ.ஆனந்த் சிவா இயக்கியிருக்கிறார்.

வித்தியாசமான கதைய தேர்நதெடுத்து இருக்கிறார் இயக்குநர் கோ.ஆனந்த் சிவா. எல்லோரிடமும் அன்பாக பழகி, எளியவர்களுக்கு உதவும் குணம் உள்ள இளைஞன். விபத்தில் முகத்தில் பெரும் காயத் தழும்பு ஏற்பட.. பர்தாவால் முகத்தை மூடியே செல்லும் இளம் பெண்ணை காதலிக்கிறான். அந்த பெண், ஆபரேசன் செய்து தழும்பை சரி செய்துவிடுகிறாள்.அதன் பின் யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுக்கிறான் நாயகன். அந்த முடிவை ஏன் எடுத்தான்.. அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்னென்ன.. என்பதுதான் கதை.

நாயகனாக வரும் ரிஷி, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பர்தா அணிந்திருக்கும் நாயகியிடம் கடுகடுப்பு காட்டுவது, அதன் காரணம் தெரிந்தவுடன் வருத்தம் தெரிவிப்பது, காதலி, ஆபரேசன் செய்து தழும்புகளை நீக்கிய பின் அவர் காட்டும் முகபாவங்கள் என சிறப்பான நடிப்பை அளித்திருக்கிறார் ரிஷி.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிங்கமுத்து, குணச்சித்திர கதாபாத்திரத்தில் வழக்கமான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அறிமுக நடிகை கரீனா ஷா, அறிமுக நாயகி என்கிற அளவுக்கு நடித்து உள்ளார். வழக்கமான நடிகர்களாக இல்லாத பலரும் முக்கிய மற்றும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் கோ.ஆனந்த் சிவும் இரு ( சிறு) வேடங்களில் நடித்து, தணத்து நடிப்பார்வத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இலக்கியன் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. தமிழக தலைமை செயலாளரும், எழுத்தாளருமான வெ.இறையன்பு மற்றும் தமிழ்முருகன் பாடல்கள் எழுதியுள்ளனர். சங்கர்.கே படத்தொகுப்பு செய்ய, கூல் ஜெயந்த் நடனம் அமைத்துள்ளார். ரவிவர்மா கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.

ஃபயர் கார்த்திக் சண்டைக்காட்சிகளை வடிவமைத்து உள்ளார்.

வித்தியாசமான கதையை அளித்துள்ளார் இயக்குநர் கோ.ஆனந்த சிவா.