Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

அடுத்தடுத்து லீக் ஆகும் ராஜமவுலியின் SSMB29 படப்பிடிப்பு தள காட்சிகள்… எச்சரித்த படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்குப் பிறகு ராஜமௌலி, மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்காக, ஐதராபாத்தில் காசி நகரத்தை செட் அமைத்து உருவாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு முதலில் ஐதராபாத்தில் தொடங்கி, பின்னர் ஒடிசா மாநிலத்தில் நடந்தது. அடுத்த கட்டமாக, காசி செட்டில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், அந்த செட்டின் புகைப்படம் யாரோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அனுமதி இல்லாமல் இவ்வாறு புகைப்படங்களை வெளியிடுவோருக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழுவினர் ஏற்கெனவே எச்சரித்திருந்தனர். இருந்தாலும், புகைப்படம் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News