யோகிபாபு சொன்ன சீன்: ரவீனா

வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் லவ் டுடே படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்தவர் ரவீனா. இவள் அளித்துள்ள பேட்டியில், “யோகிபாவுக்கு ஜோடியா என சிலர் கேட்டனர். அவர்களுக்குப் புரியவில்லை.. நடிப்பில் அனைவரும் சமம்தான். தவிர, யோகிபாவும் ஹீரோதான். சிரிக்க வைப்பதே சிரமமான விசயம். அது மட்டுமல்ல.. யோகிபாபு நல்ல கிரியேட்டரும்கூட.

லவ்டுடே படத்தில் வரும் ஒரு காட்சியில், ‘2.7 மீட்டர் ஸ்பேஸ் விடுறார்’ என நான் சொல்லும் காட்சி வரும். அப்போது நெல்லிக்காய் மரத்தைப் பிடித்தபடி நின்றிருப்பார் யோகிபாபு. அந்த  ஐடியாவை கொடுத்தது அவர்தான். அப்படி ஹீரோவான, கிரியேட்டரான ஒருவருக்கு ஜோடியாக நடித்தது பெருமைதான்” என்றார்.