Saturday, January 25, 2025

டிடி ரிட்டர்ன்ஸ் 2ல் நடிக்க சந்தானம் தான் காரணம்… இயக்குனர் கௌதம் மேனன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் கவுதம் மேனன், மலையாளத்தில் ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ எனும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வெளியாகி மிதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு, பல்வேறு தொலைக்காட்சி சேனல்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் நடித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த கவுதம் மேனன், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் என் படங்களின் சில காட்சிகளை கலாய்த்து என்னை நடிக்க வைத்தார் சந்தானம். எனக்கு கால்ஷீட் இல்லை என்றாலும், நீங்கள் கேட்டதால் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் நடித்து தந்தேன். அதேபோல், இப்போது உங்களுக்காக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் நடித்து தர வேண்டும் என்று கேட்டார்.

அவருக்காகவே அந்த படத்தில் நடித்தேன். ஆனால், அந்த படத்தில் நடித்த அனுபவத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுபவித்தேன். மக்கள் கூட திரையரங்குகளில் இந்த படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.

- Advertisement -

Read more

Local News