Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

“பா.ஜ.க.வில் நானா..? இது செம காமெடி” – நடிகர் சந்தானத்தின் பதில்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்த ‘பிஸ்கோத்’ என்ற படம் தீபாவளியன்று வெளியானது. இதையொட்டி வடபழனியின் உள்ள கமலா தியேட்டரில் நடிகர் சந்தானம், இயக்குநர் ஆர்.கண்ணன் இருவரும் நேற்று வந்து ரசிகர்களைச் சந்தித்தனர்.

அதன் பின்பு செய்தியாளர்களையும் சந்தித்தனர். அப்போது சந்தானம் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், “நான் பா.ஜ.க.வில் சேர்வதாகச் சொல்வது ‘பிஸ்கோத்’ படத்தைவிட பெரிய காமெடி..” என்றார்.

மேலும் சந்தானம் பேசுகையில், “கொரோனா காலத்தில் மக்கள் வெளியே வருவது மன உளைச்சல் நிறைந்தது. இதை தாண்டி தியேட்டருக்கு ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகத்தில் படத்தை ரிலீஸ் செய்தோம். தற்போது ரசிகர்கள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.

சினிமாவுக்கு வந்து இத்தனை வருடங்களில் இதுபோல் நான் பயந்தது இல்லை. கொரோனா காலத்தில் பிஸ்கோத்’ படத்தை தியேட்டரில் வெளியிடுகிறோமே.
மக்கள் வருவார்களோ, இல்லையோ என்று பயந்தேன். தற்போது அந்த பயம் போய்விட்டது. ரசிகர்கள் அரசு அறிவித்திருக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை அறிவுரைகளைக் கடைப்பிடித்து தியேட்டர்களுக்கு ஓடி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்..!

ஓடிடி என்பது பூஜை அறை. சினிமா தியேட்டர் என்பது கோயில் மாதிரி. ஓடிடியைவிட தியேட்டர்களில் படங்கள் வெளியாவதுதான் சிறப்பானது. ரசிகர்கள் திரையில் நடிகர்களைப் பார்த்து கை தட்டி ரசிப்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது. நடிகர்கள் மீது ரசிகர்கள் அன்பு வைத்திருப்பதும் அவர்களைக் கொண்டாடுவதும் தியேட்டர்களில் படங்கள் வெளியாவதன் மூலமாகத்தான் நடக்கிறது. இதனால் தியேட்டர்களில்தான் உண்மையான சந்தோஷமே ரசிகர்களுக்குக் கிடைக்கும். இதேபோல் தயாரிப்பாளர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் பாராட்டு கிடைக்கும். இது ஓடிடியில் நிச்சயமாகக் கிடைக்காது.

நான் பா.ஜ.வில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகிறது. இது பிஸ்கோத்’ படத்தைவிட பெரிய காமெடி. எனக்கு எதற்கு அரசியல்… ? சினிமாவில் இருக்கும் வேலையை ஒழுங்காக செய்தாலே போதும் என்று நினைக்கிறேன்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News