‘விடாமுயற்சி’யில் சஞ்சய் தத் வில்லன்

வலிமை படத்தை அடுத்து அஜித் நடிக்கும் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், படப்பிடிப்புத் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் த்ரிஷா, ஹூமா குரேஷி என இரண்டு நாயகிகள் நடிக்க இருக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் துபாயில் சஞ்சய் தத்தும் அஜித்தும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. இதனால் இந்தப் படத்தில் அவர் நடிப்பது உறுதியாகி இருக்கிறது என்று அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர். விஜய்யின் ‘லியோ’ படத்திலும் சஞ்சய் தத் நடித்துள்ளார்