Monday, September 30, 2024

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனராக சரித்திரம் படைத்த சம்யுக்தா விஜயன்… #NeelaNiraSooriyan

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ஆண் பெண் என்ற வேறுபாடு இருந்தது உண்மை தான். ஆனால் காலத்தின் போக்கில் அந்த நிலை மாறி, திருநங்கைகளுக்கு சமூகத்தில் மதிப்பும், சினிமாவில் முக்கியமான கதாபாத்திரங்களும் வழங்கப்பட்டன. இப்போது, கல்கி என்ற திருநங்கை மிகவும் பிசியான நடிகையாக வளர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குநராக சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள படம் நீல நிறச் சூரியன். இப்படத்தில் கீதா கைலாசம், கஜராஜ், மஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டீவ் பெஞ்சமின் இப்படத்திற்கு இசையமைத்து, ஒளிப்பதிவையும் செய்துள்ளார். பல உலக திரைப்பட விழாக்களில் பங்கேற்று, விருதுகளை வென்ற இப்படத்தை பர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன் சார்பில் மாலா மணியன் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியிடப்பட இருக்கிறது.

படம் குறித்து சம்யுக்தா விஜயன் கூறியதாவது, “ஒரு ஆண் பெண்ணாக மாற விரும்புவது குறித்தும், நம் சமூகம் அவர்களை எப்படி பார்க்கிறது என்பதையும், அவர்கள் எப்படிப் பிரத்தியேகமான சாதனைகளை நிகழ்த்துகின்றனர் என்பதையும், எந்தவிதமான நாடகத் தன்மையுமின்றி உணர்வுப்பூர்வமாக சொல்லும் படம் இது” என்று அவர் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News