Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகலா..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கப் போகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை 7Screen Productions நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார்.

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரும் இணைந்து முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள் என்று கடந்த பிப்ரவரி மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா பாதிப்பினால் உலகமே இயங்காமல் இருந்த சூழலில் இந்தப் படமும் மூலையில் முடங்கியது. இப்போது அனைத்து வழிகளும் திறக்கப்பட்டுவிட்டதால் இந்த மாதம் 12-ம் தேதியன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து நடிகை சமந்தா திடீரென விலகிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

விலகலுக்கான காரணத்தை சமந்தா இன்னும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவனே இயக்கவிருப்பதால் கண்டிப்பாக நயன்தாராவுக்குத்தான் அதிகமான முக்கியத்துவம் இருக்கும் என்று நினைத்தே சமந்தா விலகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வரும் 12-ம் தேதி படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில் முன்னணி ஹீரோயினான சமந்தா விலகியிருப்பதால் அந்தப் படத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News