Wednesday, April 10, 2024

சமந்தா காட்டம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் படிப்படியாக குணமடைந்த இவர் தான் கமிட்டான திரைப்படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் சிகிச்சை எடுக்கவுள்ளதால் தற்காலிகமாக சினிமாவில் இருந்து ஓய்வெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் சமந்தா இந்தோனேஷியாவின் பாலி தீவுக்குச் சுற்றுலா சென்றார். அங்கிருந்து இந்தியா திரும்பியதும் அவர் அடுத்தகட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் மருத்துவச் சிகிச்சைக்காக பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடம் ரூ.25 கோடியை கடனாகப் பெற்றுள்ளதாக தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், சமந்தா, “மயோசிட்டிஸ் சிகிச்சைக்கு ரூ.20 கோடியா? நான் அதில் சிறிய தொகையைதான் எனது சிகிச்சைக்காக செலவு செய்கிறேன். என்னால் என்னை பார்த்துக்கொள்ள முடியும். ஆயிரக்கணக்கானோர் மயோசிட்டிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இதுபோன்ற தகவல்களை பகிரும்போது பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News