சல்மான் கானுடன் நடிக்கிறாரா சமந்தா?

அஜித் நடித்த ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உட்பட சில படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். கடந்த 2021-ம் ஆண்டு சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி நடித்த ‘ஷெர்ஷா’   என்ற இந்திப் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.

இப்போது, அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதில் அதிதி ஷங்கர் நாயகி. விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இதையடுத்து அவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இதில் சல்மான் கான் ராணுவ அதிகாரியாக நடிக்க இருக்கிறார்.

இதில் நாயகியாக நடிக்க சமந்தாவிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. தசை அழற்சி நோயில் இருந்து மீண்டுள்ள சமந்தா, இப்போது நடிப்புக்கு இடைவெளி விட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் அவர் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை. சமந்தா இல்லை என்றால் த்ரிஷா, அல்லது அனுஷ்காவை நடிக்கவைக்கும் முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.