சமந்தாவுக்கு கோவில்!

குஷ்புவு, நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட சில நடிகைகளுக்கு கோவில் கட்டினார்கள் ரசிகர்கள். இந்த வரிசையில் சமந்தாவும் சேர்ந்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் குண்டூர் அருகே பாபட்லா மாவட்டத்தில் உள்ள சந்தீப் எனும் ரசிகர் அவரது வீட்டின் ஒரு பகுதியில் சமந்தாவுக்கு கோவில் கட்டி முடித்துள்ளார். . இதனை சமந்தாவின் பிறந்தநாளான இன்று (28.04.2023) திறக்க உள்ளார்.

இவர், சமந்தாவை நேரில் பார்த்ததில்லையாம் ஆனால் அவரது படங்களுக்கு தீவிர ரசிகராம். அதோடு பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் சமந்தா செய்து வரும் நலத்திட்ட உதவிகளால் அவர் மீது மதிப்பு கூடி இக்கோவிலைக் கட்ட முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்.