காதலனா, நண்பனா?: தவிக்கும் சாக்‌ஷி ‘சாரா’!

சாக்‌ஷி அகர்வால், விஜய் விஷ்வா நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படம் “சாரா” பூஜையுடன் இனிதே துவங்கியது.

விஸ்வா ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் விஜயலக்‌ஷ்மி மற்றும் செல்லம்மாள் – குருசாமி G தயாரிக்க,  ரஜித் கண்ணா  இயக்கத்தில் விஜய் விஷ்வா – சாக்‌ஷி அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் “சாரா”.

இன்று நடந்த இப்படத்தின் பூஜையில்  படக்குழுவினருடன், திரைப்பிரபலங்களுடன்,  இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு வாழ்த்தினார்.நிகழ்வில்  இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, “இந்தப் படம் அனைத்து உணர்வுகளையும் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும், கண்டிப்பாக ஒரு நல்ல படமாக உருவாகும் என்று நம்புகிறேன்” என்றார்.
கதாநாயாகன் விஜய்விஷ்வா, “கார்த்திக்ராஜாவின் இசையில் நான் நடிக்கவுள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது. விஸ்வா டிரீம் வோர்ல்ட் கம்பெனியினர் வழங்கும் இந்த திரைப்படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து முதன்முறையாக நடிக்கிறேன் மேலும் சாக்க்ஷி, பொன்வண்ணன், அம்பிகா, ரோபோ சங்கர், ஆகியோருடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சி” என்றார்.

சாக்‌ஷி, “இந்தப்படம் ஒரு புதுமையான அனுபவம் தரும் படமாக இருக்கும்” என்றார்.

இயக்குநர் ரஜித் கண்ணா, “நாயகிக்கு ஒரு இக்கட்டான சூழல் ஏற்படுகிறது.  தனக்காக எல்லாவற்றையும் விட்டு வந்த காதலனை காப்பாற்றுவதா,  தனக்காக வாழ்க்கையே தியாகம் செய்த நண்பனை காப்பாற்றுவதா  என்பதுதான் அந்த சிக்கல்.

கட்டிடங்கள் உருவாகும் பின்னணியில் இப்படத்தின் கதை நடப்பதாக அமைக்கப்பட்டு உள்ளது. கண்டிப்பாக நல்ல அனுபவம் தரும் படமாக இப்படம் இருக்கும்” என்றார்.